டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல்?

பதவி நீக்க தீர்மானம் விவகாரத்தில் டொனால்டு டிரம்புக்கு எதிராக விசாரணையை தொடங்க செனட் சபை ஒப்புதல் வழங்கியது.
டிரம்ப் மீண்டும் போட்டியிடுவதில் சிக்கல்?
x
பதவி நீக்க தீர்மானம் விவகாரத்தில் டொனால்டு டிரம்புக்கு எதிராக விசாரணையை தொடங்க செனட் சபை ஒப்புதல் வழங்கியது.

 அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனவரி 6 ஆம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் கடும் வன்முறையில்  ஈடுபட்டனர். இதனையடுத்து டிரம்ப் தனது ஆதரவாளர்களை தூண்டி விட்டதாலே வன்முறை வெடித்தது என்றும் அவருக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரந்திநிதிகள் சபையில் பதவிநீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் விசாரணையை மேற்கொள்ள ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையை முன்னெடுக்க 56 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தும், 44 உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்தனர். இதற்கிடையே டிரம்ப் தரப்பில் கலந்துக்கொண்ட அவருடைய வழக்கறிஞர், இது பேச்சுரிமைக்கும் அரசியலைப்புக்கும் எதிரானது என்றும் டிரம்ப் பதவியை விட்டு விலகிவிட்டார் என்றும் தெரிவித்தார். சென்ட் சபை விசாரிக்கும் நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் டிரம்ப் இனி அமெரிக்க தேர்தல்களில் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்