பூனைக்குட்டிகளுக்கு வாழ்வு தந்த மனிதநேயம் - சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ

கேரளாவில் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பூனையின் வயிற்றில் இருந்த குட்டிகளை எடுத்து பராமரித்து வரும் தொழிலாளி மனித நேயத்திற்கு சான்றாக திகழ்கிறார்.
பூனைக்குட்டிகளுக்கு வாழ்வு தந்த மனிதநேயம் - சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ
x
கேரளாவில் விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி பூனையின் வயிற்றில் இருந்த குட்டிகளை எடுத்து பராமரித்து வரும் தொழிலாளி மனித நேயத்திற்கு சான்றாக திகழ்கிறார்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிதாஸ். இவர் பாம்புகளை பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தன் இருசக்கர வாகனத்தில் வந்த போது ஸ்ரீ நாராயணபுரம் அஞ்சாம்பரத்தி பகுதியில் பூனை ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில் கிடந்தது. அதன் அருகே சென்று அவர் பார்த்த போது உயிரிழந்த பூனை கர்ப்பமாக இருந்ததும், அதன் வயிற்றில் குட்டிகள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்து பிளேடு ஒன்றை வாங்கி வந்த ஹரிதாஸ், பூனையின் வயிற்றை கிழித்து வயிற்றில் இருந்த 4 குட்டிகளை வெளியே எடுத்தார். பின்னர் அந்த குட்டிகளை தன் வீட்டுக்கு எடுத்துச் சென்று பால் பவுடரை தண்ணீரில் கலந்து பாலாக மாற்றி அதற்கு சிரிஞ்சு மூலமாக கொடுத்து வருகிறார். தாயை இழந்து தவிக்கும் பூனைக்குட்டிகளுக்கு தாயுமானவனாக மாறிப்போன ஹரிதாஸின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்