தெருவோர கலைஞரை சுட்டுக் கொன்ற விவகாரம் - மக்கள் தொடர் போராட்டம்

தென் அமெரிக்க நாடான சிலியில் தெருவோரக் கலைஞரை, போலீசார் சுட்டுக் கொன்றதைக் கண்டித்து, அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தெருவோர கலைஞரை சுட்டுக் கொன்ற விவகாரம் - மக்கள் தொடர் போராட்டம்
x
தென் அமெரிக்க நாடான சிலியில் தெருவோரக் கலைஞரை, போலீசார் சுட்டுக் கொன்றதைக் கண்டித்து, அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் சாண்டியாகோவில் நடந்த போராட்டத்தில், பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து வன்முறையாளர்களை, பாதுகாப்பு படையினர் கலைத்தனர்.

துருக்கியில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேளிக்கை விடுதிகளின் உரிமையாளர்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் அங்காராவில், தங்களின் விடுதிகளின் முன்பாக வந்த உரிமையாளர்கள், கைகளை தட்டி, நூதன போராட்டம் நடத்தினர். ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி, விடுதிகளை திறக்க அனுமதிக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் அரசுக்கு எதிராக மாபெரும் பேரணி நடைபெற்றது. தலைநகர் பியனோஸ் ஏரஸில் நடந்த இந்த பேரணியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, அந்நாட்டு அதிபர் அல்பர்ட்டோ பெர்ணான்டசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பேரணியில் பங்கேற்றவர்கள், வேலைவாய்ப்பு, வருமான உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

ஆப்பிரிக்க நாடான எகிப்தில் இசைநிகழ்ச்சிகளை பார்வையாளர்களின் வீட்டுக்கு அருகிலேயே நிகழ்த்தும் வகையில், நடமாடும் இசைநிகழ்ச்சி மேடை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்தக் குழுவில் இருப்பவர்கள், வாகனம்மூலம் சென்று, இசைநிகழ்ச்சிகளை பார்வையாளர்களின் வீட்டுக்கு அருகில் நிகழ்த்தி வருகின்றனர். வீட்டுக்கு அருகிலே,  இசை நிகழ்ச்சிகளை கண்டுகளிப்பது மகிழ்ச்சியாக உள்ளதாக எகிப்து மக்கள் தெரிவித்து உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்