ஆங் சான் சூகியை விடுதலை செய்யுங்கள் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்

மியான்மரில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
ஆங் சான் சூகியை விடுதலை செய்யுங்கள் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
x
மியான்மரில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை உடனே விடுதலை செய்ய வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. 

மியான்மரில் தேர்தல் மோசடி நடந்ததாக கூறி ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் எதிரொலித்துள்ளது. பல மேற்கு நாடுகள் மியான்மர் ராணுவத்திற்கு கண்டனம் தெரிவித்த போதும், சீனா மற்றும் ரஷ்யா பாதுகாத்து வந்தன. இந்நிலையில், ஐ.நா. பொதுச்செயலாளர்  அன்டோனியா குட்டரெசின் முயற்சியால் ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மியான்மர் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஜனநாயக அமைப்புகள் மற்றும் நடைமுறைகளை பாதுகாக்க வேண்டும் எனவும், மனித உரிமைகள் மீறல்களுக்கு ஒரு போதும் வாய்ப்பளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.  மியான்மர் மக்களின் விருப்பத்தின் அடிப்படையில் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விருப்பம் தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்