சாதனை மனிதர் 'ஜெப் பெசோஸ்'... கடந்துவந்த பாதை
பதிவு : பிப்ரவரி 04, 2021, 11:31 AM
அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும்  ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இணையம் சார்ந்த இன்றைய ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கெல்லாம் உத்வேக ரோல் மாடலாக, சாதனையாளராக ஜொலிக்கிறார் ஜெப் பெசோஸ். 

அமெரிக்காவில் சிறு பிராந்திய அளவில் தொடங்கிய அமேசான் நிறுவனம், இன்று உலக அளவில் ஆன்-லைன் வர்த்தகத்தில் கோலோச்சுகிறது. 
 
1995-ல் புத்தக விற்பனைக்காக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் ஜெப் பெசோசின் புதியவற்றை சிந்திக்கும் திறன் மற்றும் கடினமான உழைப்பால் இன்று வானுயுர வளர்ச்சியை வசமாக்கியுள்ளது.

ஆன்-லைன் அறிந்தவர்கள் அமேசானையும் அறிவர் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கும் ஜெப் பெசோஸ் 1964 ஆம் ஆண்டு நியூ மெக்சிகோவில் பிறந்தவர்.

தன்னுடைய சிறு வயதில் 'அப்போலோ 11' விண்கலம் நிலவிற்கு சென்றதை கண்டு, ஒரு விண்வெளி ஆராய்ச்சி வீரர் ஆக வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தார், பெசோஸ். அதே கனவுடன் இயற்பியல் படிப்பை தொடங்கியவர் பின்னர் ஏனோ அதனை விரும்பாமல் கம்ப்யூட்டர் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார்.

பின்னர் வாஷிங்டனில் உள்ள நிறுவனங்களில் பணியை தொடங்கிய போதே முதலாளியாக வேண்டும் என உத்வேகம் கொண்ட ஜெப் பெசோஸ், 1994-ல் இன்டர்நெட் பயன்பாடு அதிகரிப்பதை கணக்கிட்டு ஆன்-லைன் விற்பனையை தொடங்கினார். சியாட்டில் நகரில் மனைவி வீட்டில் கார் நிறுத்தும் இடத்தில் 10,000 டாலர்கள் முதலீட்டில் பணியை தொடங்கினார்.  

பின்னர் பெற்றோரிடமும், உறவினர்களிடம் திட்டத்தை விரிவாக எடுத்துரைத்து நிதி திரட்டிய பெசோஸ், 1995 ஜூலை 16 ஆம் தேதி அமேசான் நிறுவனத்தை தொடங்கினார்.

வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்ததும் புத்தகத்தை வாங்கி விற்பனை செய்தார். இதில் காலதாமத்தை குறைப்பதற்காக அமேசான் சேமிப்பு கிடங்குகளை அவர் உருவாக்கினார். பின்னர் தொலைக்காட்சி, ரேடியோ உள்ளிட்ட பிற மின்னணு சாதனங்கள் விற்பனையை தொடங்கினார், பெசோஸ்.

அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவரும் ஆஃபர் திட்டங்களை அறிவிப்பதை வியாபார யுக்தியாக கடைபிடித்த அவர், 2001-ல் இலவச டெலிவரி சேவையை ஆரம்பித்தார். இதனால், விற்பனையும் அமோகமானது. உலகின் பல்வேறு நாடுகளுக்கு தற்போது அமேசான் நிறுவனம் சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

எதிலும் புதுமையை கொண்டு வருவதில் தீர்க்கமான சிந்தனை கொண்ட பெசோஸ், 2005-ல் அமேசான் நிறுவனத்தின் பிரைம் சேவையையும், புத்தங்களை வாசிக்கும் கிண்டில் சேவையையும் அறிமுகம் செய்தார்.

இது போல் பத்திரிக்கை துறையிலும் கால் பதித்த அவர், 2013 ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையை வாங்கினார். மேலும், ப்ளூ ஆரிஜின் என்கிற விண்வெளி ஆய்வு கருவிகளை தயாரிக்கும் நிறுவனத்தையும் தொடங்கினார்.

இன்று அத்தியாவசிய பொருட்களையும் விற்பனை செய்யும் தளமாக மாறியிருக்கும் அமேசானின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 13 லட்சம் கோடி. அமேசான் என்ற பிரம்மாண்ட நிறுவனத்தை கட்டமைத்த ஜெப் பெசோஸ், அதன் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

எனினும் அமேசான் நிறுவனத்தின் ஒரு நிர்வாக தலைவராக தொடர்ந்து செயல்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார். அமேசானின் வருங்கால வளர்ச்சியிலும் அவருடைய பணி முக்கிய இடம்பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

415 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

264 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

71 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

புதிய கட்சி தொடங்கப் போவதில்லை - டொனால்ட் டிரம்ப்

தான் புதிய கட்சி தொடங்கப் போவதில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

29 views

அமெரிக்காவில் 3வது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்காவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

20 views

ஜமால் கொலை விவகாரத்தில் நடந்தது என்ன?

அமெரிக்கா - சவுதி இடையிலான நட்புறவை சவாலாக்கியிருக்கும் பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

62 views

ஜமால் கசோகி கொலை விவகாரம் - சவுதியின் பட்டத்து இளவரசர்தான் காரணம் என அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கை வெளியீடு

பத்திரிக்கையாளர் ஜமால் கசோகி கொலைக்கு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தான் காரணம் என்று அமெரிக்க புலனாய்வுத் துறை வெளியிட்ட அறிக்கைக்கு சவுதி அரேபிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

18 views

சிறை கைதிகளுக்கு இடையே மோதல் - 79 கைதிகள் உயிரிழப்பு

ஈக்வடார் நாட்டில் உள்ள சிறைகளில், கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது.

127 views

படகுக்கு அருகில் வந்த திமிங்கலம் - அச்சத்துடன் வீடியோ எடுத்த பயணிகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலில் ஹம்ப்பேக் திமிங்கலம் தென்பட்டு உள்ளது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.