மியான்மரில் மீண்டும் ராணுவ ஆட்சி ஏன்? - ராணுவ தளபதி விளக்கம்

மியான்மரில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோசடி நடந்துள்ளதாகவும், அதன் காரணமாகவே ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டு ராணுவ தளபதி விளக்கம் அளித்துள்ளார்.
மியான்மரில் மீண்டும் ராணுவ ஆட்சி ஏன்? - ராணுவ தளபதி விளக்கம்
x
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூகியின் என்.எல்.டி கட்சி, 83 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றது. இதில் மோசடி நடைபெற்றதாக ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்ததால், இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த நிலையில், ஆங் சான் சூகி உட்பட முக்கிய தலைவர்களை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. ஓராண்டுக்கு அவசர நிலையை ராணுவம் பிரகடனப்படுத்தி உள்ளதாகவும், ராணுவ தளபதி மின் ஆங்கிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், முன்கூட்டியே தலைவர்கள் கைது செய்யப்பட்டது மியான்மரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் ஆட்சியை பிடித்த ராணுவம் - மக்கள் அச்சம்

மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதால் பொதுமக்கள் பதற்றமடைந்துள்ளனர். ஓராண்டுக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. யாங்கன் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் நீண்ட வரிசையில் நின்று, பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர். 

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு

மியான்மரில் ராணுவ ஆட்சி அமைக்கப்பட்டதற்கு எதிராக தாய்லாந்தில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் பாங்காக்கில் உள்ள மியான்மர் தூதரகம் முன்பு இருநாடுகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்க போலீஸ் முற்பட்டதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் 2 பேர் காயமடைந்த நிலையில், காவல்துறையினரை தாக்கியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்