"போர் ஏற்படும்" என சீனா மிரட்டல்

தைவான் சுதந்திரம் என்பது போருக்கு வித்திடும் என அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.
போர் ஏற்படும் என சீனா மிரட்டல்
x
தைவான் சுதந்திரம் என்பது போருக்கு வித்திடும் என அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.
 
1949-ல் சீனாவில் கம்யூனிச புரட்சி ஏற்பட்ட பின்னர் தனி நாடாக முதலாளித்துவ ஜனநாயக பாதையில் தைவான் சென்றது. அமெரிக்காவின் ஆதரவுடன் வளர்ந்த நாடாக மாறியுள்ளது. ஆனால் இன்று வரையில் தைவான், தங்களுடைய ஒரு மாகாணம் என சீனா கூறிவருகிறது. கடந்த ஒருவார காலமாக தைவானின் வான்வெளிப் பகுதிகளுக்கு சீனா போர் விமானங்களை அனுப்பி வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, தைவானின் பாதுகாப்பை உறுதி செய்ய முழு ஆதரவையும் அளிப்பதாக அறிவித்தது. இந்நிலையில், தைவான் விடுதலையை முன்னெடுப்பவர்கள் நெருப்புடன் விளையாடுகின்றனர் என்று சீன பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஊ கியான் எச்சரித்து உள்ளார். சீனவிடம் இருந்து தைவான் விடுதலை பெற முயன்றால் போர் ஏற்படும் எனவும் கூறியுள்ளார். இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்