"நோவாவாக்ஸ்" தடுப்பு மருந்து 86% செயல் திறன் கொண்டது

அமெரிக்காவைச் சேர்ந்த நோவாவாக்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகள் பிரிட்டனில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன.
நோவாவாக்ஸ் தடுப்பு மருந்து 86% செயல் திறன் கொண்டது
x
அமெரிக்காவைச் சேர்ந்த நோவாவாக்ஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட சோதனைகள் பிரிட்டனில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் அந்த மருந்து கொரோனா தொற்றை தடுப்பதில் 89 புள்ளி 3 சதவீதம் செயல் திறன் கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும், பிரிட்டனில் பரவி வரும் உருமாறிய கொரோனாவை தடுப்பதில் 86 சதவீதம் செயல் திறன் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்றுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தடுப்பு மருந்தை பிரிட்டனின் மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் ஆய்வு செய்யும் என்று கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்