இணையத்தை கலக்கும் தரை ஓவியம் - உலகச் செய்திகள்

இணையத்தை கலக்கும் தரை ஓவியம் - உலகச் செய்திகள்
இணையத்தை கலக்கும் தரை ஓவியம் - உலகச் செய்திகள்
x
தென் ஆப்பிரிக்காவில் ஓவியர் ஒருவர் வரைந்த தரை ஓவியம் இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது. தென் ஆப்பாரிக்காவின் கேப் டவுண் மாகாணத்தில் பிரஞ்சு ஓவியர் சைபே, தரை ஓவியத்தில் புதுயுக்தியை  புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாக இரு கைக்கள் ஒன்றிணைந்தவாறு உள்ள தரை ஒவியத்தை அவர் வரைந்து உள்ளார். தற்போது இந்த ஓவியம் இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது. 

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஆடை அலங்கார கண்காட்சி விமரிசையாக நடைபெற்றது. பிரான்சில் கொரோனா பரவல் சற்று ஓய்ந்து உள்ள நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாரீசில் ஆடை அலங்கார கண்காட்சி நடைபெற்றது. முன்னணி நடிகைகள் உள்பட பல்வேறு மாடல்கள் நிகழ்வில் கலந்து கொண்டு பல ரக ஆடைகளை அணிந்து அணிவகுப்பு நடத்தினர். 

லெபனானில் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டவரின் உடலை அடக்கcd செய்ய திரளான மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லெபனான் நாட்டில் கொரோனா ஊரடங்கை கண்டித்து பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்து உள்ளனர். டிரிப்போலி நகரில் போலீசாருக்கும்,  ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். இந்த நிலையில் இளைஞரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் திரளான மக்கள் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.  

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவை ஜூலை மாதத்திற்கு தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு விழா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி மொராக்கோ நாட்டை சென்றடைந்துள்ளது. வட ஆப்பரிக்க நாடான மொராக்கோவிற்கு சீனா தடுப்பூசி வழங்க உள்ளதாக தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் 6 கோடியே 60 லட்சம் தடுப்பூசிகள் மொரோக்கோ நாட்டின் காஸாபிளான்கா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்ட மொராக்கோ சுகாதார அமைச்சகம் விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க உள்ளதாக தெரிவித்து உள்ளது.    

Next Story

மேலும் செய்திகள்