1 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை : 2-ம் உலகப்போர் உயிரிழப்பை விட அதிகம்

இங்கிலாந்தில் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
1 லட்சத்தை கடந்த பலி எண்ணிக்கை : 2-ம் உலகப்போர் உயிரிழப்பை விட அதிகம்
x
கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இங்கிலாந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆயிரத்து 631 பேர் உயிரிழந்தனர். மேலும்  20 ஆயிரத்து 89 பேருக்கு புதிதாய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 162 ஆக அதிகரித்துள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டனில் உயிரிழந்த மக்களை விட இது அதிகம். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

கொரோனா -கொலம்பிய அமைச்சர் உயிரிழப்பு

கொரோனா பரவல் காரணமாக கொலம்பிய பாதுகாப்பு துறை அமைச்சர் உயிரிழந்தார்.  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொலம்பிய பாதுகாப்பு துறை அமைச்சர் கார்லஸ் ஹோம்ஸ், ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். மேலும் மருத்துவ கண்காணிப்பிலும் உடல் நிலை மோசமானதை அடுத்து கார்லஸ் ஹோம்ஸ் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கார்லஸ் ஹோம்ஸ் உயிரிழந்தார். கார்லஸ் ஹோம்ஸ் மறைவுக்கு கொலம்பியா அதிபர் இவான் டியூக் உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இத்தாலி பிரதமர் கியூசெப் ராஜினாமா

இத்தாலியில் கொரோனா தொற்றை சரியாக கையாளவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதற்கு பொறுப்பேற்று, பிரதமர் கியூசெப் ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் கியூசெப் கொன்டே கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக செய்யாதது தான் அதிக உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டுக்களும், விமர்சனங்களும் எழுந்தன. மேலும் அவருக்கு அளித்த வந்த ஆதரவுகளை கூட்டணி கட்சிகள் விலக்கிக் கொண்டதையடுத்து தனது பதவியை கியூசெப் ராஜினாமா செய்துள்ளார்.

ஊரடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - கலவரத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்கள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நெதர்லாந்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் பொது மக்கள் சிலர் கடந்த சனிக்கிழமை முதல் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தீ வைத்தல், வணிக நிறுவனங்களில் கொள்ளையடித்தல், போலீசாரை கற்களை கொண்டு தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது தொடர்பாக இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்களை  போலீசார் கைது செய்துள்ளனர். பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்