சீன உறவை அமைதியாக அமெரிக்கா தொடரும் - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல்

சீனாவுடனான உறவை அமைதியான நிலையில் அமெரிக்கா தொடரும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறி உள்ளார்.
சீன உறவை அமைதியாக அமெரிக்கா தொடரும் - வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தகவல்
x
சீனாவுடனான உறவை அமைதியான நிலையில் அமெரிக்கா தொடரும் என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறி உள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவுடனான உறவை கையாளும் விதம் குறித்து அரசியல்வாதிகள் மற்றும் நட்பு நாடுகளுடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க ராணுவத்தில் 3-ம் பாலினத்தவருக்கும் வாய்ப்பு தடையை நீக்கிய அதிபர் பைடன்,பாலின சமத்துவ ஆதரவாளர்கள் வரவேற்பு

அமெரிக்க ராணுவத்தில் 3-ம் பாலினத்தவர் பணியாற்றுவதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் நீக்கி உள்ளார். டிரம்ப் இந்த தடையை அமல்படுத்தியிருந்த நிலையில், 3-ம் பாலினத்தவரும் ராணுவத்தில் பணிபுரியலாம் என்று பைடன் உத்தரவிட்டு உள்ளார். பைடனின் இந்த நடவடிக்கையை பாலின சமத்துவ ஆதரவாளர்கள் வரவேற்று உள்ளனர்.

அதிகரிக்கும் கொரோனா தொற்று - பயணிகள் விமான சேவைக்கு தடை - வெறிச்சோடிய விமான நிலையங்கள்

இஸ்ரேலில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், பயணிகள் விமான சேவைக்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதால், எப்போதும் பரபரப்பாக காணப்படும், பென் குரியன் விமான நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், ஏராளமான விமானங்கள், விமான நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

ராணுவம் - புரட்சி அமைப்பு மோதல் - தாக்குதலில் 11 பேர் உயிரிழப்பு - சோமாலியாவில் திடீர் பதற்றம்

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் ராணுவத்துக்கும், ஜூபாலாந்து புரட்சி அமைப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். ஜூபாலாந்து புரட்சி அமைப்பு தனி நாடு கோரிவரும் நிலையில், கெடோ பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் தொலைத் தொடர்பு கட்டடம் சேதம் அடைந்தது. இதனால், சோமாலியாவில் திடீர் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு - கலவர பூமியாக காட்சியளிக்கும் நெதர்லாந்து - 3-ஆவது நாளாக தொடரும் போராட்டம்

நெதர்லாந்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நடந்து வரும் போராட்டத்தில் கலவரம் வெடித்து உள்ளது. போராட்டக்காரர்கள், போலீசார் மீது கற்களை வீசியும், பாதுகாப்பு வாகனங்களை எரித்தும், தங்கள் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர். இதனால், தலைநகர் அம்ஸ்டர்டேம் கலவர பூமியாக காட்சி அளிக்கிறது. 3-ஆவது நாளாக போராட்டம் நீடிக்கும் நிலையில், கலவர சம்பவங்களுக்கு அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்