நேபாளத்தில் நீடிக்கும் அரசியல் குழப்பம் - கைவிரித்து, ஒதுங்கிக் கொண்ட இந்திய அரசு
பதிவு : ஜனவரி 25, 2021, 02:03 PM
நேபாள நாடாளுமன்ற கீழ் அவையை கலைக்க பரிந்துரைத்த அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாக போட்டி நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
நேபாள நாடாளுமன்ற கீழ் அவையை கலைக்க பரிந்துரைத்த அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலியை, கட்சியில் இருந்து நீக்கி  உள்ளதாக போட்டி நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு என்ன காரணம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்....அரசியல் குழப்பங்களால், நேபாள நாடாளுமன்றத்தின் கீழவையை கலைக்க கடந்த மாதம் 20 ஆம் தேதி பரிந்துரைத்தார், அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி.அந்த கோரிக்கையை அந்நாட்டின் குடியரசுத் தலைவர் பித்ய தேவி பண்டாரி ஏற்றுக் கொண்டதுடன், வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.இதனால் ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்துள்ளது.நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் துணைத் தலைவராக உள்ள புஷ்ப கமல்ர தாகா பிரச்சந்தா மற்றும் மாதவ் குமார் நேபாள்  ஆகியோரின் பதவி அரசியலில் தாக்கு பிடிக்க முடியாத நிலையிலேயே, கே.பி.சர்மா ஒலி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.ஒலியின் இந்த முடிவால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி உடைபடாமல் பாதுகாக்க சீன எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவிய நிலையில், கே.பி.சர்மா ஒலியை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து போட்டி நேபாள கம்யூனிஸ்ட் கட்சி நிலைக் குழு கூடி நீக்கியுள்ளது.இந்த தகவலை, காத்மண்டுவில் செய்தியாளர்களிடம் பேசிய போட்டி நேபாள கம்யூனிஸ்ட் கட்சி  செய்தித் தொடர்பாளர் நாராயங் காஜி ஸ்ரேஸ்தா தெரிவித்துள்ளார்.அரசியல் அமைப்பு சட்டத்திற்கு விரோதமாக நாடாளுமன்ற கீழவையை கலைக்க பரிந்துரை செய்தது தொடர்பாக விளக்கம் கேட்டு கே.பி.சர்மா ஒலிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அவர் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே அவர் கட்சியில் இருந்து தற்போது நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இதனிடையே, தனது ஆதரவாளரை டெல்லிக்கு அனுப்பி கே.பி.சர்மா ஒலி ஆதரவு கேட்டதாக கூறப்படும் நிலையில், நேபாளத்தில் தற்போது நடைபெற்று வரும் சிக்கல் உள்நாட்டு சம்மந்தமானது என்றும், அதற்கு ஜனநாயக முறைப்படி தீர்வுக்காண வேண்டும் என இந்தியா தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.இதனால் ஏமாற்றம் அடைந்த கே.பி.சர்மா ஒலி, தற்போது சீன ஆதரவுடன் ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட், லெனிஸ்ட் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்பி, தேர்தலை சந்திக்க திட்டமிட்டு வருவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதனிடையே, இந்த நடவடிக்கையை தான்  எடுக்காவிட்டால், தமது அரசுக்கும், குடியரசுத் தலைவருக்கும் எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர போட்டி குழுவினர் திட்டமிட்டு இருந்ததாக கே.பி.சர்மா ஒலி குற்றம்சாட்டி உள்ளார்.ஆளுங்கட்சியே பிரதமரை நீக்கியதால் உலக அரசியல் களமே நேபாளத்தை உற்று நோக்குகிறது தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

331 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

63 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

46 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

12 views

பிற செய்திகள்

இது தான் குழந்தை உள்ளம் : கிணற்றில் தவறி விழுந்த சிறுமி... பொம்மையை கேட்டு அழுத குழந்தை

இளங்கன்று பயமறியாது என்பது போல் சிரியாவில் கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுமி, கிணற்றுக்குள் இருந்து கொண்டு தனது பொம்மையை கேட்ட சம்பவம் குழந்தை உள்ளத்தை வெளி காட்டியுள்ளது.

0 views

வெள்ளை மாளிகையில் வரவேற்பு பதாகைகள் - மனைவியுடன் பைடன் நடைப்பயிற்சி

உலகெங்கும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்தில் ,காதலர் தினத்தை வரவேற்கும் வகையில் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

1 views

டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம்... டிரம்ப் தரப்பினலான வாதம் விரைவில் துவக்கம்

அமெரிக்காவின் செனட் சபையில் டிரம்ப் மீதான தகுதி நீக்க தீர்மானம் மீது ஜனநாயகக் கட்சியினரின் வாதம் நிறைவடைந்தது.

9 views

பனியில் உருளும் பாண்டாக்கள் - உணவை ரசித்து உண்ணும் காட்சி

பெல்ஜியமில் உள்ள பெய்ரி டெய்சா உயிரியல் பூங்காவில், பாண்டா கரடிகள் பனியில் விளையாடியபடியே காலை உணவை உண்ணும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

11 views

கொரோனாவுக்கு எதிரான போரில் இணைந்த நாய்கள் - மோப்ப சக்தியால் வைரஸ் கண்டுபிடிப்பு

உலகையே அச்சுறுத்தும் கொரோனாவுக்கு எதிரான போரில் மோப்ப நாய்களும் இணைந்துள்ளன.

15 views

அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பு - அமெரிக்காவின் மொத்த கடன் அளவு உயர்வு

அமெரிக்க பட்ஜெட் பற்றாக்குறை அதிகரிப்பு - அமெரிக்காவின் மொத்த கடன் அளவு உயர்வு

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.