இந்தியா, சீனா இடையிலான 9 - வது சுற்று பேச்சு நிறைவு; 15 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த பேச்சு வார்த்தை
பதிவு : ஜனவரி 25, 2021, 09:52 AM
சர்வதேச எல்லைக்கோட்டு அருகே உள்ள துருப்புக்களை உடனடியாக சீனா விலக்கிக் கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச எல்லைக்கோட்டு அருகே உள்ள துருப்புக்களை உடனடியாக சீனா விலக்கிக் கொள்ள வேண்டும் என இந்தியா வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்தாண்டு இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறியதை தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான உறவு, முன்எப்போதும் இல்லாத வகையில் மோசமான நிலைக்கு சென்றது. 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் சீர்கேடு அடையச் செய்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சுமார் 7 கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்த நிலையில், இருநாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் செப்டம்பர் 10 ஆம் தேதி மாஸ்கோவில் சந்தித்து பேச்சு நடத்தினர். இதனைத் தொடர்ந்து நடந்த 8 ஆம் சுற்று பேச்சிலும் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், 2 மாதங்களுக்கு பின்னர் இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் பங்கேற்ற கார்ப்ஸ் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நேற்று காலை சீன பகுதியான மால்டோவில் தொடங்கியது. சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த பேச்சு இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிறைவடைந்துள்ளது. இந்த பேச்சில், சர்வதேச எல்லைக் கோட்டு அருகே நிறுத்தியுள்ள தனது துருப்புக்களை உடனடியாக சீனா விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய பகுதிகளில் துருப்புக்கள் விலக்கிக் கொள்ளப்பட்டதை ஆய்வு செய்ய விரும்புவதாகவும் இந்திய தரப்பில் முன்வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது எல்லையில் இருநாடுகளும் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை களம் இறக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

524 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

50 views

பிற செய்திகள்

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்

8 views

மகத் நடிக்கும் புதிய திரைப்படம்... படத்தின் தலைப்பை வெளியிட்ட சிலம்பரசன்

மகத் நடிக்கும் புதிய திரைப்படம்... படத்தின் தலைப்பை வெளியிட்ட சிலம்பரசன்

8 views

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10 வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

64 views

24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் - மத்திய சுகாதார துறை தகவல்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு ஆயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

14 views

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொரோனா தொற்று

ஐந்து மாநில தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

7 views

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

தமிழகத்தில் 6,984 பேருக்கு கொரோனா... அதிகபட்சமாக சென்னையில் 2,482 பேர் பாதிப்பு

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.