இணையத்தை கலக்கி வரும் பெர்னி சாண்டர்ஸ் - பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பெர்னி

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா பற்றி உலகம் முழுவதும் பேசிக்கொண்டிருக்க, அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒற்றை புகைப்படத்தால் மிகவும் பிரபலமாகியுள்ளார் பெர்னி சாண்டர்ஸ். அப்படி என்ன இருக்கிறது அந்த புகைப்படத்தில்? விவரிக்கிறது இந்த தொகுப்பு.
இணையத்தை கலக்கி வரும் பெர்னி சாண்டர்ஸ் - பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பெர்னி
x
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா பற்றி உலகம் முழுவதும் பேசிக்கொண்டிருக்க, அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒற்றை புகைப்படத்தால் மிகவும் பிரபலமாகியுள்ளார் பெர்னி சாண்டர்ஸ். அப்படி என்ன இருக்கிறது அந்த புகைப்படத்தில்? விவரிக்கிறது இந்த தொகுப்பு.உலக நாடுகளின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க அதிபராக 20ஆம் தேதி பதவியேற்றார் ஜோ பைடன். முன்னாள் அதிபர்கள், நாடாளுமன்ற பிரதிநிதிகள் புடைசூழ நடைபெற்ற இந்த விழா பற்றி உலகமே பேசி முடித்துவிட்ட இந்த சமயத்தில், விழாவின் நாயகன் போன்று ஒருவர் மட்டும் தற்போது பிரபலமாகியுள்ளார். அவர்தான் அமெரிக்காவின் நாடாளுமன்ற பிரதிநிதி பெர்னி சாண்டர்ஸ்.விழாவில் கோட் சூட்டுடன் தலைவர்கள் பங்கேற்க, குளிர்காலத்தில் அணியும் சுவட்டர், முகக்கவசம், துணியால் நெய்யப்பட்ட கையுறை என வித்தியாசமான கெட்டப்புடன் வருகை புரிந்தார் பெர்னி. இது விழாவில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்க்க, கால் மேல் கால் போட்டு பவ்வியமாக அமர்ந்தவாறு அவர் விழாவை ரசித்த புகைப்படம் இணையவாசிகளுக்கு பேசுபொருளாகியுள்ளது.அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கையெழுத்து போடும் போது அருகில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பது தொடங்கி, லண்டன் அரச குடும்ப உறுப்பினர் போன்றெல்லாம் பெர்னியின் புகைப்படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஒருபடி மேலே சென்று, தனது வீட்டில் பெர்னி அமர்ந்திருப்பது போன்றும், தனது தாயார் அவரை மடியில்  ஏந்தி இருப்பது போன்று புகைப்படத்தை வெளியிட்டு அட்டகாசம் செய்துள்ளார்.போப் ஆண்டவர் கையில் பெர்னி, கார்ட்டூனில் பெர்னி, உலகின் மிகவும் பிரபலமான இடங்களில் பெர்னி, கொஞ்சி குலாவும் காதலர்களுக்கு இடையே பெர்னி, ஏன் மலையாள பட போஸ்டரில் பெர்னி என இணையத்தில் நிறைந்திருக்கிறார், பெர்னி... குறிப்பாக பெர்னி சாண்டர்ஸ் புகைப்படத்தை சித்தரித்து வெளியிடுவதற்காகவே சிலர், பிரத்யேக இணையதளத்தையும் உருவாக்கி அதகளம் செய்துள்ளனர்.விதவிதமான படங்கள், மீம்ஸ்களால் பேசுபொருளானது பற்றி அவரிடம் கேட்டதற்கு



Next Story

மேலும் செய்திகள்