தேடுதல் தளத்தினை நிறுத்திவிடுவோம்... - கூகுள் நிறுவனம் எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் தங்களுடைய தேடுதல் தளத்தினை நிறுத்திவிடுவோம் என கூகுள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தேடுதல் தளத்தினை நிறுத்திவிடுவோம்... - கூகுள் நிறுவனம் எச்சரிக்கை
x
ஆஸ்திரேலியாவில் தங்களுடைய தேடுதல் தளத்தினை நிறுத்திவிடுவோம் என கூகுள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.இணையதளங்களில் மக்கள் செய்திகளை படிப்பதால் வருவாய் ஈட்டும் கூகுள் நிறுவனம், செய்தி நிறுவனங்களுக்கு உண்மையான நிதியை வழங்க வேண்டும் என ஆஸ்திரேலியா அரசு கூறுகிறது. இதனை சட்டமாக்கும் விதமாக சட்ட வரைவையும் கொண்டு வந்துள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள கூகுள், இச்சட்டம் கடுமையானது என்றும் உள்ளூர்மக்கள் சேவையை அணுகுவதை பாதிக்கும் என்றும் கூறியுள்ளது. மேலும், இந்த சட்ட வரைவு சட்டமானால் கூகுள் தேடுதளம் தன்னுடைய சேவையை ஆஸ்திரேலியாவில் நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை எனவும் அந்நாட்டு செனட் குழுவில் தெரிவித்துள்ளது. இதுபோன்று பேஸ்புக் நிறுவனமும் இந்த வரைவு சட்டமானால் தங்கள் தளத்தில் பயனாளர்கள் செய்திகளை பகிர்வதை தடுத்து நிறுத்துவோம் எனக் கூறியிருக்கிறது. 


Next Story

மேலும் செய்திகள்