சிறுமிகளின் "சூப்பர் வுமன்" - பெண் குழந்தைகளின் முன்மாதிரி

அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராகப் பதவியேற்ற கமலா ஹாரிசின் வெற்றி உலகம் முழுவதும் வாழும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.
சிறுமிகளின் சூப்பர் வுமன் - பெண் குழந்தைகளின் முன்மாதிரி
x
அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் துணை அதிபராகப் பதவியேற்ற கமலா ஹாரிசின் வெற்றி உலகம் முழுவதும் வாழும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும்  நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. பதவி ஏற்பு நிகழ்வை கண்ட சிறுமிகளின் உணர்ச்சிமிக்க தருணங்களை பார்க்கலாம்...

"கமலா நீ பல சாதனைகளைப் புரிவதில் முதல் பெண்ணாக இருக்கலாம்... ஆனால் நீயே கடைசி இல்லை என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும்"... கமலா ஹாரிசிடம்  அவரின் தாயார்  ஷ்யாமளா கோபாலன் ஹாரிஸ், முன்னரே கூறிய தீர்க்க தரிசன வார்த்தைகள் இவை.

துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட  முதல் அமெரிக்க பெண்... முதல் கருப்பினப் பெண்... முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் என்ற பல சாதனைகளை செய்து காட்டி தன் தாயாரின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்துள்ளார் கமலா ஹாரிஸ்...

இதற்கு முன் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட பெண்களால் நிகழ்த்த முடியாத சாதனையை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் செய்து காட்டி பெண் சமூகத்திற்கு மேலும் ஒரு மகுடம் சூட்டி இருக்கிறார். பதவியேற்பின் போது புன்னகையுடன், கம்பீர தோற்றத்தில் வலம் வந்த கமலா ஹாரிஸ் உறுதிமொழியை ஏர்றுக்கொள்ள கையை உயர்த்தியபோது, நெஞ்சை  உயர்த்தி நின்றது நிமிர்ந்த நன் நடை நேர்கொண்ட பார்வை, யாருக்கும் அஞ்சாத நெறிமுறை போன்ற மகாகவி பாரதியின் வாக்கியத்தை நினைவுபடுத்தியது. குழந்தைகள் மேல் அலாதிப்பிரியம் கொண்ட கமலா ஹாரிஸ் பதவி ஏற்பு நிகழ்வுக்கு வந்தபோது ஒரு சிறுமியின் நெற்றியில் முத்தமிட்டு அன்பை வெளிக்காட்டினார்...

கமலா ஹாரிஸின் வெற்றி அவருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பெண் இனத்திற்கும் உரியது என்பதை உலகம் முழுவதும் வாழும் பெண்களும், சிறுமிகளும் உணர்ச்சி பொங்க நினைத்தது, ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பிரதிபலித்தது. கமலா ஹாரிசை தங்கள் முன் மாதிரியாக எடுத்துக்கொண்ட பெண்குழந்தைகள், அவரின்  பதவியேற்பு நிகழ்வை தொலைக்காட்சியில் பார்த்து தாங்களே பதவியேற்றதைப்போல மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.

சமத்துவமின்மை, நிறவெறி உள்ளிட்ட பல்வேறு தடைகளை உடைத்து தடைக்கற்களைப் படிக்கல்லாக்கி, வெற்றியின் பாதையில் பயணிக்கும் கமலா ஹாரீசை, பெண் ஒபாமா என்றே அமெரிக்கர்கள் பெருமையோடு பார்க்கிறார்கள். அவரின் பதவியேற்ற நிகழ்வு, உலகின் ஏதோ ஒரு மூலையில் நம்பிக்கையையும் தைரியத்தையும் மட்டுமே துணையாகக் கொண்டு சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு பெண்ணின் விழி ஓரத்திலும் கண்ணீரைத் தேக்கியிருக்கும் என்பது இளம் தலைமுறைக்கு ஓர் பாடம்.

Next Story

மேலும் செய்திகள்