டிரம்ப் வெளியே... பைடன் உள்ளே... அமெரிக்க பாரம்பரிய முறைப்படி பதவியேற்பு

ஒருபுறம் எதிர்பார்ப்பு மறுபுறம் சலசலப்பு அமெரிக்காவில் தொடர்ந்த சூழலில், அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார்.
டிரம்ப் வெளியே... பைடன் உள்ளே... அமெரிக்க பாரம்பரிய முறைப்படி பதவியேற்பு
x
ஒருபுறம் எதிர்பார்ப்பு மறுபுறம் சலசலப்பு அமெரிக்காவில்  தொடர்ந்த சூழலில், அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார்.  
46வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்வுக்காக, அமெரிக்கா மட்டுமின்றி உலகமே ஜனவரி 20ஆம் தேதியை எதிர்பார்த்திருந்தது. 

அமெரிக்காவில் புதிய அதிபரின் பதவியேற்பு விழா ஜனவரி 20ஆம் தேதியன்று நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஜோ பைடன் முறைப்படி அதிபராக பதிவியேற்கும் நிகழ்ச்சி வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் இருக்கும் கேப்பிட்டல் வளாகத்தில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணி அளவில் நடைபெற்றது. 

பாரம்பரிய முறைப்படி அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், ஜோ பைடனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

பதவியேற்பு விழாவில்  அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜார்ஜ் புஷ், கிளின்டன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், அவர்களின் வாழ்த்துக்களை பைடன் பெற்றுக்கொண்டார்

நாடாளுமன்ற வளாகத்தில் பதவியேற்பு விழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும், வெள்ளை மாளிகைக்கு அதிபர் ஜோ பைடன் புறப்பட்டார். அப்போது, கண்கவர் அணிவகுப்பு மரியாதையுடன் அவரை அமெரிக்க ராணுவத்தினர் வழி அனுப்பி வைத்தனர்

வெள்ளை மாளிகைக்கு செல்லும் வழியில் டுவிட்டரில் பதிவிட்ட ஜோ பைடன், அமெரிக்க அதிபர் மாளிகை அலுவலகம் நோக்கி செல்வதாகவும் காலத்தை வீணாக்காமல் நடவடிக்கைகளை தொடங்கப் போவதாகவும் குறிப்பிட்டார். கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து அமெரிக்க குடும்பங்களை பாதுகாப்பதற்கு உடனடியாக துணிச்சலான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ஜோ பைடன் தெரிவித்தார். 

வெள்ளை மாளிகைக்கு சென்ற ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் ​பைடனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு அமெரிக்க அதிபராக தனது பணியை தொடரும் பைடனை வெள்ளை மாளிகை பணியாளர்கள் வரவேற்றனர்

பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி அமெரிக்காவே விழாக்கோலம் பூண்டிருந்தது. அலங்கரிக்கப்பட்ட நாடாளுமன்ற வளாகத்தில்  அந்நாட்டின் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும், பேண்ட் வாத்தியங்களும் இசைக்கப்பட்டன. கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Next Story

மேலும் செய்திகள்