அமெரிக்காவின் 46-வது அதிபரானார் ஜோ பைடன்

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் பதவியேற்றுக்கொண்டார்.
அமெரிக்காவின் 46-வது அதிபரானார் ஜோ பைடன்
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றதன் மூலம் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ.பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவில் புதிய அதிபரின் பதவியேற்பு விழா ஜனவரி 20ம் தேதியன்று நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஜோ பைடன் முறைப்படி அதிபராக பதிவியேற்கும் நிகழ்ச்சி வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் இருக்கும் கேப்பிட்டல் வளாகத்தில் இந்திய நேரப்படி 20ம் தேதி இரவு 9.30 மணி அளவில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய முறைப்படி அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், ஜோ பைடனுக்கு பதிவிப் பிரமாணம் செய்து வைத்தார். பைடன் பதவியேற்பு விழாவில்  அமெரிக்க முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜார்ஜ் புஷ், கிளின்டன் ஆகியோர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்