வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பு - இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வாய்ப்பு

வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சிலின் துணை இயக்குநராக காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட சமீரா பசிலியை ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் கூட்டாக நியமனம் செய்துள்ளனர்.
வெள்ளை மாளிகையில் முக்கிய பொறுப்பு - இந்திய வம்சாவளி பெண்ணுக்கு வாய்ப்பு
x
அமெரிக்காவில் புதியதாக அமையவிருக்கும் ஜோ பைடன் நிர்வாகத்தில் இடம்பெறும் உயர்மட்ட குழு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதில் இந்திய வம்சாவளியினருக்கு அதிக வாய்ப்புக்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இந்திய வம்சாவளி பெண்ணான சமீராவை வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சில் துணை இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார். இப்பொறுப்பை ஏற்கும் சமீரா அமெரிக்க பொருளாதார கொள்கை முடிவுகள் தொடர்பாக பைடனுக்கு ஆலோசனைகளை வழங்குவார். அட்லாண்டாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய சமீரா ஒபாமா நிர்வாகத்திலும் ஆலோசகராக பணியாற்றியவர். மேலும், உள்நாட்டு நிதி மற்றும் சர்வதேச விவகாரங்களில் அமெரிக்க கருவூலத் துறையின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியிருக்கிறார். 


Next Story

மேலும் செய்திகள்