இந்தோனேசிய விமான விபத்து - கருப்பு பெட்டி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு

இந்தோனேசியாவில் விபத்துக்குள் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டி இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்தோனேசிய விமான விபத்து - கருப்பு பெட்டி இருக்கும் இடம் கண்டுபிடிப்பு
x
62 பேருடன் பறந்து கொண்டிருந்தபோது மாயமான விமானம் விபத்தில் சிக்கியது.  ஜகார்தாவின் ஆயிரம் தீவில் மனித உடல்பாகங்களும், பயணிகள் பைகளும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு அந்நாட்டு கடற்படை கப்பல்கள், விமானங்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளன. இதற்கிடையே விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டிகள் இருக்கும் இடம்  சிக்னல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் அவைகளை மீட்க ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் தயாராகி வருகிறார்கள் என்றும் கருப்பு பெட்டியை ஆய்வு செய்யும் போது விபத்து நேரிட்டது ஏன் என்பது தொடர்பான விபரங்கள் தெரியவரும் என அந்நாட்டு மீட்பு குழு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்