முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூண் இடிப்பு - தமிழ் மாணவர்கள் பந்துக்கு அழைப்பு

தமிழ் மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ள பந்த்தால், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூண் இடிப்பு - தமிழ் மாணவர்கள் பந்துக்கு அழைப்பு
x
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூண் இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மாணவர்கள், தமிழ் அமைப்புகள்  மற்றும் அரசியல் கட்சிகள் விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு மக்கள் முழு ஆதரவு அளித்துள்ளனர். இதனால்  யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்கிளப்பு மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூண் இரவோடு இரவாக இடித்து அகற்றப்ட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையின், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பந்த் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனால், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதோடு,  வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.
இதேபோல தனியார் போக்குவரத்து சேவை இடம் பெறவில்லை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் அனைத்தும் முடங்கி உள்ளது. அரசு பேருந்துகள்மிகவும் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பந்த்தால், பள்ளி, கல்லூரிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்