"மீண்டும் தூபியை அமைக்க முயற்சி" - யாழ்.பல்கலை துணைவேந்தர் முடிவு

முள்ளி வாய்க்கால் நினைவு தூபியை மீண்டும் அமைப்பதற்கு தான் முயற்சி எடுக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழகம் துணைவேந்தர் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
மீண்டும் தூபியை அமைக்க முயற்சி - யாழ்.பல்கலை துணைவேந்தர் முடிவு
x
முள்ளி வாய்க்கால் நினைவு தூபியை மீண்டும் அமைப்பதற்கு தான் முயற்சி எடுக்கப்போவதாக யாழ்.பல்கலைக்கழகம் துணைவேந்தர் தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். பல்வேறு தரப்பினரும் துணைவேந்தருக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் த.சித்தார்த்தன் கேட்டுக் கொண்டார்.

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இடிப்பு : "அதிர்ச்சியளிக்கிறது - கண்டனத்துக்குரியது"

இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகவும், இது  கண்டனத்திற்கு உரியது எனவும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது டுவிட்டர் பதிவில், இலங்கை அரசு தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, இடிக்கப்பட்ட நினைவு சின்னத்தை மீண்டும் நிறுவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்