உலக பணக்காரர்கள் பட்டியல் - டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதல் இடம்

உலக பணக்காரர்கள் பட்டியலில் அமெரிக்க தொழில் அதிபர் எலான் மஸ்க் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்து உள்ளார்.
உலக பணக்காரர்கள் பட்டியல் - டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதல் இடம்
x
உலக பணக்காரர்கள் பட்டியலை அமெரிக்காவின் ப்ளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் முதல் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பேசாசை பின்னுக்கு தள்ளி, அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்சின் உரிமையாளர் எலான் மஸ்க் முதல் இடத்தை பிடித்து உள்ளார். பங்கு சந்தையில் டெஸ்லா கார் நிறுவன பங்குகள் அபரிமித வளர்ச்சி பெற்ற நிலையில், இரவோடு இரவாக எலான் மஸ்க் உலகின் முதல் பணக்காரர் ஆகி உள்ளார். எலான் மஸ்க்கின் தற்போதைய சொத்து மதிப்பு இந்திய மதிப்பில்,14 லட்சம் கோடி ரூபாய் என  கணக்கிடப்பட்டு உள்ளது. முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு உலகின் முதல் பணக்காரராக இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பேசாஸ்சின் சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 13 லட்சம் கோடி ரூபாயாக குறைந்ததால் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்