அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரம் - "தானும் கோபம் கொண்டேன்" : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விளக்கம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட கலவரத்தினால் தானும் கோபம் கொண்டதாக அதிபர் டொனால்டு டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரம் - தானும் கோபம் கொண்டேன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விளக்கம்
x
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த கலவரத்திற்கு டிரம்ப் அவர்களை தூண்டிவிட்டதுதான் காரணம் என பல தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இச்சம்பவத்திற்கு டிரம்ப் விளக்கம் அளித்து உள்ளார். அதில், பிற அமெரிக்கர்களை போன்று வன்முறை சம்பத்தினால் நானும் கோபம் அடைந்தேன் என்றும் தான் நாடாளுமன்றத்தை பாதுகாக்க உடனடியாக பாதுகாப்பு படையை அங்கு நிறுத்தினேன் என்றும் அங்கு ஊடுருவியவர்களை வெளியேற்றியதாகவும் கூறியுள்ளார். அமெரிக்கா எப்போதும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் தேசமாக இருக்கும் என்றும் இனி என்னுடைய முழு கவனமும் ஆட்சி அதிகாரத்தை அமைதியாக ஒப்படைப்பதில் இருக்கும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்