கொரோனா தடுப்பூசி - அமெரிக்கா சந்திக்கும் சவால்கள்

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிக்கான அனைத்து பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்து சுமார் ஒரு மாதம் ஆக உள்ள நிலையில், அதில் அமெரிக்கா சந்திக்கும் சவால்கள்.
கொரோனா தடுப்பூசி - அமெரிக்கா சந்திக்கும் சவால்கள்
x
அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அவசர கால ஒப்புதலுக்கு பின் தடுப்பூசி செலுத்தும் பணி டிசம்பர் 14ம் தேதி தொடங்கியது. 

பைசர் தடுப்பூசி ஒப்புதல் அளித்து சில நாட்களில் மார்டனா நிறுவனத்தின் தடுப்பூசிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.

ஆனால் தடுப்பூசி செலுத்தும் பணியில் அமெரிக்கா பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. 

நாட்டில் அதிகரித்து வரும் தினசரி கொரோனா தொற்று, தடுப்பூசி பணிகளை கடுமையாக பாதித்துள்ளது. 

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடுப்பூசி போட்டும் பணியில் மெத்தனத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தலைவர் ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார்.

மாகாணங்களில் அதிகரித்து வரும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் மருத்துவ கட்டமைப்பில் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்