பயங்கரவாத நிதியளிப்பு குற்றச்சாட்டு புகார் : ஜாக்கி-உர்-ரெஹ்மான் லக்வியை கைது செய்தது பாகிஸ்தான்

பயங்கரவாத நிதியளிப்பு குற்றச்சாட்டில் மும்பை தாக்குதல் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜாக்கி-உர்-ரெஹ்மான் லக்வியை, நேற்று பாகிஸ்தான் போலீ​ஸ் கைது செய்துள்ளது.
பயங்கரவாத நிதியளிப்பு குற்றச்சாட்டு புகார் : ஜாக்கி-உர்-ரெஹ்மான் லக்வியை கைது செய்தது பாகிஸ்தான்
x
கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஜாக்கி-உர்-ரெஹ்மான் லக்வி பின்ர் ஜாமீன் பெற்று வெளிவந்த நிலையில், 2015 முதல் 6 ஆண்டுகள் யாருக்கும் தெரியாத மறைவிடத்தில் வாழ்ந்து வந்த நிலையில் இந்த கைது சம்பவம் அரங்கேறியுள்ளது.  மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய லக்வியின் கைது நட​வடிக்கையை  இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜாக்கி-உர்-ரெஹ்மான் லக்வி மீது குறிப்பிட்ட சம்பவங்களை குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் நீதிமன்றத்தில் லக்வியை பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்