பட்டாசு வெடித்ததால் நடந்த விபரீதம் - கொத்து கொத்தாக இறந்த பறவைகள்

இத்தாலி தலைநகர் ரோமில் நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டாசு வெடித்ததால் நடந்த விபரீதம் - கொத்து கொத்தாக இறந்த பறவைகள்
x
இத்தாலி தலைநகர் ரோமில்  நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புத்தாண்டையொட்டி வெடிக்கபட்ட பட்டாசுகளே பறவைகள் இறப்பிற்கு காரணம் என சர்வதேச விலங்கு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து, அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் லோரொடானா டிக்லியோ கூறுகையில் திடீரென்று பட்டாசு வெடிக்கும்போது பறந்து கொண்டிருக்கும் பறவைகள் சத்தத்தில் நிலைகுலைந்து ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும். சுவர்கள், ஜன்னல்கள், மின் இணைப்புகளில் மோதிவிடும் என்றும் மாரடைப்பால் கூட இறந்து போகக்கூடும் என்று தெரிவித்தார். 

பனிச்சரிவில் சிக்கியவரை மீட்கும் பணி தீவிரம் - மீட்பு பணியில் டிரோன்கள், மோப்ப நாய்கள்

ஸ்பெயினில் பனிசரிவில் சிக்கியவரை மீட்கும் பணியில் மீட்பு படையினர் களமிறங்கி உள்ளனர். வடக்கு ஸ்பெயினில் பனியை நீக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர் பனிச்சரிவில் சிக்கியுள்ளார். இதையடுத்து பனியில் சிக்கியவரை மீட்க வீரர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். தீவிர பனிப்பொழிவு காரணமாக மீட்பு பணியில் டிரோன்கள், மோப்பு நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல், ஸ்பெயினில் மற்றொரு பகுதியில் ஏற்பட்ட பனிப்பொழிவில் 2 வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்