பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு - இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் வன்முறை கும்பல் இந்து கோவிலை இடித்து தீ வைத்து எரித்துள்ளது.
பாகிஸ்தானில் இந்து கோவில் இடிப்பு - இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
கைபர் பக்துன்கவா மாகாணம் கராக் மாவட்டம் தெரி கிராமத்தில் இருக்கும் இந்து கோவில் பிரிவினையின் போது சூரையாடப்பட்டது. 1997-ல் மதவாதிகளால் இடிக்கப்பட்டது. இதனையடுத்து நீண்ட நாட்களுக்கு பின்னர் 2015-ம் ஆண்டு அந்நாட்டு உச்சநீதிமன்றம் கோவிலை கட்ட உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அடுத்து அங்கு கோவிலை கட்டும் பணி தொடங்கி நடைபெற்றுள்ளது. இதற்கு இஸ்லாமியர்கள் சிலர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கூட்டம் நடத்திய ஜாமியத் உலெமா இ இஸ்லாம் இயக்கத்தின் நூற்றுக்கணக்கானோர் கும்பலாக கோவிலுக்கு சென்று கோவிலை இடித்துள்ளனர். மேலும், கோவிலுக்கு தீ வைத்து உள்ளனர். கூட்டத்தில் பேசிய மத தலைவர்கள் வெறுப்பை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக குற்றம் சாட்டியிருக்கும் மனித உரிமை ஆர்வலர்கள், இச்செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இவ்விவகாரத்தில் இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண முதல்வர் மக்மூத் கான் கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்