பிரிட்டனில் வேகம் பிடிக்கும் கொரோனா தொற்று - ஊரடங்கை தாண்டியும் தொற்று அதிகரிப்பு

பிரிட்டனில் இதுவரையில் இல்லாத வகையில் ஒரே நாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அங்கு புதிய வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் வேகம் பிடிக்கும் கொரோனா தொற்று - ஊரடங்கை தாண்டியும் தொற்று அதிகரிப்பு
x
பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. அங்கு இதுவரையில் இல்லாத வகையில் நேற்று செவ்வாய் கிழமை 53 ஆயிரத்து 135 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் 414 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மற்றொரு அதிர்ச்சி தகவலாக அனைத்து பாதிப்புகளும் தரவுகளும் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. நாட்டில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இதனால், அந்நாட்டு சுகாதார அமைப்பு எதிர்பாராத நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ளது சுகாதாரத்துறை செயலாளர் கூறியுள்ளார். ஊரடங்கையும் மீறி வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவிலும் புதிய கொரோனா வைரஸ் பரவல்  - வெளிநாடு செல்லாத இளைஞருக்கு பாதிப்பு
 
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலும் இங்கிலாந்தில் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என மாகாண கவர்னர் ஜராடு போலிஸ் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட 20 வயது இளைஞர் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் சமீபத்தில் எந்தஒரு நாட்டுக்கும் பயணம் மேற்கொள்ளவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் உருமாறிய வைரஸ் பரவ தொடங்கியது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 



Next Story

மேலும் செய்திகள்