"முழுவீச்சில் தயாராகும் சினோவேக் தடுப்பூசி, அடுத்த மாதத்தில் தடுப்பூசி தயார்" - சா பவுலா மாகாண ஆளுநர் பேச்சு

சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசி பிரேசிலில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
முழுவீச்சில் தயாராகும் சினோவேக் தடுப்பூசி, அடுத்த மாதத்தில் தடுப்பூசி தயார் - சா பவுலா மாகாண ஆளுநர் பேச்சு
x
சீனாவின் சினோவேக் கொரோனா தடுப்பூசி பிரேசிலில் தயாரிக்கப்பட்டு வருகிறது. சா பவுலா மாகாணத்தில் சீனா தடுப்பூசி சினோவோக்கின் உற்பத்தி மும்முரமாக நடந்து வரும் நிலையில் இது குறித்து சா பவுலா மாகாண ஆளுநர் ஜோ டோரியா தெரிவிக்கையில் வரும் ஜனவரி மாதம் 25-ஆம் தேதிக்குள் தடுப்பூசி மக்களுக்கு செலுத்த தயாராகும். மேலும் 12 மாகாணங்களில் தடுப்பூசி விநியோகம் குறித்து அனுமதி கோரி உள்ளனர் என்றார். இதற்கிடையில் ஆளும் பிரேசில் அதிபர் போல்சனரோ இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. வரும் 2022-ஆம் ஆண்டு பிரேசில் அதிபர் தேர்தலில் டோரியா போட்டியிட போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  


Next Story

மேலும் செய்திகள்