உருமாறிய கொரோனா.... பலன் தருமா தடுப்பூசி? - 2021- லும் அச்சுறுத்துமா கொரோனா 2.0?

உருமாற்றம் அடைந்த கொரோனோ வைரஸால் உலகம் முழுவதும் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா, தடுப்பூசிகளின் செயல்பாடு பலனளிக்குமா என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.
உருமாறிய கொரோனா.... பலன் தருமா தடுப்பூசி? - 2021- லும் அச்சுறுத்துமா கொரோனா 2.0?
x
உருமாற்றம் அடைந்த கொரோனோ வைரஸால் உலகம் முழுவதும் நோய் பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா, தடுப்பூசிகளின் செயல்பாடு பலனளிக்குமா என்பதை அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு. 

 உலகம் முழுவதும் இதுவரை MERS , SARS, NOVAL என 3 வகைகளாக கொரோனோ தொற்றுகள் கண்டறியபட்டுள்ளன. இதில் MERS மற்றும் SARS  வகை கொரோனோ நோய் என்பது அவ்வளவு எளிதாக மனிதர்களிடம் இருந்து மற்றொரு சக மனிதர்களுக்கு நோய்த்தொற்றை ஏற்படுத்தவில்லை.

ஆனால் 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய NOVAL கொரோனோ வைரஸ் மனிதர்களிடையே நேரடி தாக்குதலை ஏற்படுத்தி வேகமாக மற்றவர்களுக்கும் பரவும் கொடிய தொற்று நோயாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இங்கிலாந்தில் அண்மை காலமாக பரவி வரும் கொரோனோ தொற்றுகளில் பெரும்பாலான ஆர்என்ஏ மூலக்கூறுகள் உருமாற்றம் அடைந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

மனித செல்களில் எளிதில் பரவும் வகையில் உருமாற்றம் அடைந்த N501 என்ற மூலக் கூறுகள் மற்றும் ஸ்பைக் நீட்சிகளை கொண்ட புதிய வகை வைரஸ்  70% அளவிற்கு அதிக திறனுடன் நோய் பரவலை அதிகப்படுத்துவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல உலக நாடுகளும் இங்கிலாந்துடனான விமான சேவைகள் ரத்து மற்றும் அடுத்தகட்ட ஊரடங்கு என பல  நடவடிக்கைகளுக்கு தயாராகிவிட்ட  நிலையில் இந்தியா மற்றும் தமிழகத்தைப் பொருத்தவரை விமான நிலையங்களில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதில் சில பயணிகளுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவர்களது வைரஸ் மாதிரி பூனே ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு ஆர்என்ஏ மூலக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்தில் வேகமாக பரவி வரும் இந்த புதிய வகை வைரஸ் கொரோனோ பரவலின் இரண்டாவது அலையாக மாறிவிடுமா... கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் பலனளிக்குமா என்ற பல கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் வைரஸ்களின் உருவமைப்பு மாறுதல் என்பது இயல்பானதே எனவே இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை வைரஸ் காரணமாக தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு மற்றும்  பயன்பாட்டில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்கின்றனர் மருத்துவர்கள்...

இருப்பினும் இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில்  தடுப்பூசிகள் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் வரை பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள் .


Next Story

மேலும் செய்திகள்