அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபிடன் - பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடன் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.
நிவார்க் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இது பாதுகாப்பானது என்று அமெரிக்க மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஜோபிடனுக்கு தடுப்பூசி போடப்பட்ட காட்சி தொலைக்காட்சிகளில்
நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தமக்கு தடுப்பூசி போட்ட செவிலியருடன் கை மோதி, ஜோபிடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்
சிறுவனுடன் ஐஸ் ஹாக்கி விளையாடிய ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின் சிறுவனுடன் ஐஸ் ஹாக்கி விளையாடி அனைவரையும் மகிழ்வித்தார். மாஸ்கோவில் உள்ள ஹாக்கி விளையாட்டு
அரங்கிற்கு சென்ற புதின் அங்கு தந்தையுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சிறுவனை கையால்தட்டி கொடுத்து உற்சாகப்படுத்தினார். பின்னர் அச்சிறுவனுடன் ஐஸ் ஹாக்கி விளையாடிய ரஷ்ய அதிபர் புதின் அங்கிருந்தவர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.
பனிக்கட்டிகளால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் கிராமம்
சீனாவின் ஹிலாங்ஜியாங் மாகாணத்தில் பனிக்கட்டிகளால் அழகிய கிறிஸ்துமஸ் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த எழில் கொஞ்சும் பனிகிராமத்தை கிறிஸ்துமஸ் தாத்தாக்களும், பொது மக்களும் ஆர்வமுடன் கண்டு களித்து வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் - விலங்குகளுக்கு சிறப்பு உணவுகள்
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. அவற்றை விலங்குகள் ஆர்வமுடன் தின்று மகிழ்ந்தன.
Next Story

