சிலி நாட்டில் அதிபருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் - முக கவசம் அணியாததால் அதிரடி நடவடிக்கை
பதிவு : டிசம்பர் 21, 2020, 01:53 PM
சிலி நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி முக கவசம் அணியாத அதிபருக்கு ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலி, கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகும் . அங்கு இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 16 ஆயிரத்து 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு வைரஸ் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதன்படி சிலியில் முக கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. இந்த விதிமுறையை மீறினால் அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது. இந்த நிலையில் கடந்த மாத இறுதியில், அதிபர் செபாஸ்டியன் பெனெரா தனது சொந்த ஊரான கச்சாகுவா நகரில் கடற்கரைக்கு சென்றபோது, ஒரு பெண்ணுடன் செல்பி எடுத்துக்கொண்டார். அப்போது அதிபர் முக கவசம் அணிந்திருக்கவில்லை. எனவே இந்த செல்பி சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது. இந்த விவகாரத்தில் சிலி அரசு, அதிபர் செபாஸ்டியன் பெனெராவுக்கு 3 ஆயிரத்து 500 அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட அதிபர், தனது செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

420 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

223 views

சாதனை மனிதர் 'ஜெப் பெசோஸ்'... கடந்துவந்த பாதை

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

100 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

72 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

'கர்ணன்' படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியீடு

நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

31 views

2 குழந்தைகளின் தாயான அன்ஜா காலென்பாச் சிறந்த அழகியாக தேர்வு

ஜெர்மனியில், நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான, அன்ஜா காலென்பாச் எனும் பெண்மணி மிஸ்.ஜெர்மனியாக, தேர்வு செய்யப்பட்டார்.

48 views

கைதி தப்பிப்பது போன்ற தத்ரூப சித்திரம்

இங்கிலாந்தின் ரீடிங் நகரில் உள்ள சிறைச் சுவரில், கைதி தப்பிப்பது போன்ற தத்ரூப சித்திரம் தீட்டப்பட்டு உள்ளது.

159 views

78 வது கோல்டன் குளோப் விருது விழா - காணொலி மூலம், கலைஞர்கள் பங்கேற்பு

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவில், காணொலி மூலம் 78 வது, கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

9 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

25 views

புதிய கட்சி தொடங்கப் போவதில்லை - டொனால்ட் டிரம்ப்

தான் புதிய கட்சி தொடங்கப் போவதில்லை என்று முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.