இங்கிலாந்தில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் - மயக்கம் அடைந்து சரிந்த நிகழ்வால் பரபரப்பு
இங்கிலாந்தில் ஃபைசர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட செவிலியர் ஒருவர், செய்தியாளர் சந்திப்பின் போது கேமரான முன்பு மயக்கம் அடைந்து சரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அந்த செவிலியர் நலமாக உள்ளதாக இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மேலும் இரண்டு சம்பவங்களில் 4 செவிலியர்கள் பாதிக்கப்பட்டதாகவும், தற்போது அவர்கள் நலமுடன் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி சில பின்விளைவுகளை ஏற்படுத்துவதாகவும், மற்றபடி 94 சதவீதம் அளவுக்கு இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
Next Story

