நிலவிற்கு சீனா அனுப்பிய விண்கலம் - நிலவின் தரைப்பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்ட மண், கல் துகள்கள்

நிலவிற்கு சீன தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய சாங்கே - 5 என்ற விண்கலம் நிலவின் தரைப் பகுதியில் இருந்து மண், கல் துகள்களை சேகரித்து, பின் வெற்றிகரமாக சமீபத்தில் மீண்டும் பூமிக்கு திரும்பியது.
நிலவிற்கு சீனா அனுப்பிய விண்கலம் - நிலவின் தரைப்பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்ட மண், கல் துகள்கள்
x
நிலவிற்கு சீன தேசிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய சாங்கே - 5 என்ற விண்கலம் நிலவின் தரைப் பகுதியில் இருந்து மண், கல் துகள்களை சேகரித்து, பின் வெற்றிகரமாக சமீபத்தில் மீண்டும் பூமிக்கு திரும்பியது. அந்த விண்கலத்தில் சேமிக்கப்பட்டிருந்த நிலாவின் துகள்களை சீன அறிவியல் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் முழுமையாக ஆய்வு செய்யவுள்ளனர். சீன  தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற, இந்த துகள்களை வழங்கும் விழாவில் சுமார் 80 விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.  விழாவில் பேசிய சீன துணை பிரதமர் லியு ஹெ, இந்த ஆராய்ச்சியில் மேலும் பல விஞ்ஞானிகளை ஈடுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்