அமெரிக்காவை பதம் பார்க்கும் பனிப்புயல் - போக்குவரத்து துண்டிப்பு, விமானங்கள் ரத்து
பதிவு : டிசம்பர் 18, 2020, 11:47 AM
கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது
கொரோனா அச்சுறுத்தலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அமெரிக்காவுக்கான அடுத்த அச்சுறுத்தலாக வந்து சேர்ந்துள்ளது பனிப்புயல்...

கடந்த இரு நாட்களாக அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களை மிரட்டி வருகிறது பனிப்புயல்... கனெக்டிகட், டெலவர், மய்ன், மேரிலேண்ட், நியூ ஜெர்சி, நியூயார்க் என்று ஏகப்பட்ட மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. 

குறைந்த காற்றழுத்தப்பகுதியில், ஈரக்காற்றின் அளவு அதிகரிக்கும் வேளையில், பனிப்பொழிவும் அதிகரிக்கும். அந்த சமயத்தில், காற்றின் வேகம் அதிகரித்தால் பனிப்பொழிவு, பனிப்புயலாக மாறும்.அமெரிக்காவில் ஆண்டுதோறும், பனிப்புயல் வீசுவது, வாடிக்கையான நிகழ்வுதான் என்றாலும், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு அங்கு பனிப் புயலின் தாக்கம் பன்மடங்காகி உள்ளது.

தொடர்ந்து வீசி வரும் பனிப்புயலால், பெரும்பாலான அமெரிக்க மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். சாலைகள் எங்கும் பனி படர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. சில இடங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் நேர்ந்து உள்ளன. இதேபோல், மின் இணைப்புகளும், எரிவாயு குழாய்களும், சேதம் அடைந்து உள்ளன.

அமெரிக்காவின் இதயமாக கருதப்படும் நியூயார்க் நகரம் பனிப்புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டு அவசர நிலை அமலுக்கு வந்துள்ளது. சுமார் மூன்றரை அடி  உயரத்திற்கு சாலைகளில் கொட்டிக் கிடக்கிறது பனி. இதனால், பல நகரங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விர்ஜீனியா, நியூயார்க் மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தவித்து வருகின்றனர்.

பனிப்புயலால் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சாலையில் கொட்டிக் கிடக்கும் பனியை அகற்றும் பணிகள், அங்கு மும்முரமாக நடந்து வருகின்றன.
இதனிடையே, சில பகுதிகளில் ஆடல், பாடல் விளையாட்டுகளுடன் பனிப்புயலை வழக்கம்போல் வரவேற்கத் தொடங்கிவிட்டனர் அமெரிக்கர்கள்...

தொடர்புடைய செய்திகள்

ஜாக்கிசானின் "வாங்கார்ட்" பட டிரெய்லர் - நடிகர் மாதவன் வெளியீடு

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் வாங்கார்ட் படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் வெளியிடுகிறார்.

64 views

(25/12/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் தேர்தலும்... உருமாறும் பிரசாரங்களும்...

சிறப்பு விருந்தினர்களாக : பரந்தாமன், திமுக || ஜவகர் அலி, அதிமுக || ஜெகதீஷ், சமூக ஆர்வலர் || சி.கே.குமரவேல், மக்கள் நீதி மய்யம்

47 views

பிற செய்திகள்

கடல் குதிரை குட்டியிடும் வீடியோ காட்சி - இணையதளத்தில் டிரெண்டிங்

ஆஸ்திரேலியாவில் கடல் குதிரை குட்டியிடும் வீடியோ பதிவை சிட்னி மீன்வாழ் அருங்காட்சியகம் வெளியிட்டு உள்ளது.

8 views

இந்தியாவுடன் தான் வர்த்தகம் - இலங்கை உறுதி

இலங்கை, கொழும்பு துறைகத்தின் கிழக்கு முனையில், இந்தியாவுடன் தான் வர்த்தகம் செய்யப்படும் என இலங்கை உறுதியாக தெரிவித்துள்ளது.

5 views

தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்தவே பதவி - இலங்கை அமைச்சர்

இந்தியாவுடனும், குறிப்பாக தமிழகத்துடன் நல்லுறவை ஏற்படுத்துவதற்காகவே, தனக்கு இந்த மீன்வளத்துறை அமைச்சர் பதவியை வழங்கியுள்ளதாக, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

8 views

இலங்கைக்கு 5 லட்சம் தடுப்பூசிகள் - இலவசமாக வழங்கி இந்தியா உதவிக்கரம்

இந்திய அரசு நன்கொடையாக வழங்கியுள்ள 5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கை அரசிடம் இன்று ஒப்படைக்கப்படுகின்றன.

9 views

அமெரிக்காவில் முதல் பெண் நிதியமைச்சராகி சாதனை

அமெரிக்காவின் நிதியமைச்சராக 74 வயதான ஜனத் யெல்லன் பதவியேற்று உள்ளார்.

170 views

ஹெச்-4 விசா மூலம் பணியாற்ற அனுமதி - அமெரிக்கவாழ் இந்தியர்கள் வரவேற்பு

அமெரிக்காவுக்கு ஹெச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணியாற்றுவதற்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அனுமதி அளித்து உள்ளார்.

206 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.