அமெரிக்க தேர்தல் - பைடனின் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

டிரம்ப் தரப்புக்கு பின்னடைவாக, ஜோ பைடனின் வெற்றிக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க தேர்தல் - பைடனின் வெற்றிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடனின் வெற்றியை ஏற்காக அதிபர் டிரம்ப் தரப்பு பல்வேறு மாகாண நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்ந்து உள்ளது. பென்சில்வேனியா மாகாண நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தேர்தலில் பதிவான பல லட்சம் தபால் ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்க டிரம்ப் பிரசார குழு கேட்டுக்கொண்டது. கடந்த வாரம் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மேத்யூ பிரான், தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதையடுத்து டிரம்ப் பிரசார குழு மேல் முறையீட்டு நீதிமன்றத்தை நாடியது. அங்கு வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு, வழக்கில் குற்றத்தை நிரூபிக்க குற்றச்சாட்டுகளும் தெளிவாக இல்லை, அதற்கு தேவையான ஆதாரங்களும் இல்லை என்று கூறி, வழக்கு விசாரணைக்கு தகுதியற்றது என தள்ளுபடி செய்தனர். இது, டிரம்ப் தரப்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்து உள்ளது. இருப்பினும் டிரம்ப் பிரசார குழு, வழக்கை அடுத்த கட்டமாக உச்சநீதிமன்றம் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்