ஈரான் விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை ..."தாக்குதல் பின்னணியில் இஸ்ரேல்?"

ஈரான் தலைநகர் தெஹரான் அருகே மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது.
ஈரான் விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை ...தாக்குதல் பின்னணியில் இஸ்ரேல்?
x
விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே, ஈரான் ரகசிய அணு ஆயுத திட்டத்தின்  சூத்திரதாரி என  வளர்ந்த நாடுகளால் கருதப்பட்டவர். ஈரான் நாட்டின் அணு குண்டின் தந்தை என்று வர்ணிக்கப்பட்ட மொஹ்சென் பக்ரிசாதே சென்ற கார் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.செறிவூட்டப்பட்ட யுரேனியம் சிவில் அணு மின் உற்பத்தி மற்றும் ராணுவ அணு ஆயுதங்கள் இரண்டிற்கும் ஒரு முக்கிய அங்கம் என்ற நிலையில், ஈரான் உற்பத்தி செய்யும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவு அதிகரித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2010 மற்றும் 2012-க்கு இடையில் நான்கு ஈரானிய அணு விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தற்போது நடைபெற்று உள்ள தாக்குதல் சம்பவத்துக்கு பின்னால் இஸ்ரேல் உள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்