அமெரிக்காவில் பெருகும் வேலையில்லா திண்டாட்டம் - 7 லட்சம் பேர் வேலையிழப்பு

அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது.
அமெரிக்காவில் பெருகும் வேலையில்லா திண்டாட்டம் - 7 லட்சம் பேர் வேலையிழப்பு
x
அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலியால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து உள்ளது. ஊரடங்கு காரணமாக அமெரிக்காவில் முன்னணி நிறுவனங்கள் முதல் சில்லரை வர்த்தக அலுவலகங்கள் வரை மூடப்பட்டு உள்ளது. இதனால் பலதரப்பட்ட மக்கள் தன் அன்றாட வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த வார இறுதியில் 7 லட்சத்து 11 ஆயிரம் பேர் வேலை இழந்து இருந்த நிலையில் அது தற்போது 7 லட்சத்து 42 ஆயிரமாக அதிகரித்து உள்ளதாக அமெரிக்க தொழிலாளர் நல அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அதேநேரம் வரும் டிசம்பர் மாதம் வேலையிலா திண்டாட்டத்தால் 12 மில்லியன் பேர் பாதிக்கப்படுவார்கள் என அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  வல்லரசு நாடான அமெரிக்காவில் நிலவும் இச்சூழல் உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.          



Next Story

மேலும் செய்திகள்