"சிங்கள மக்களின் வாக்குகளால் தான் அதிபர் ஆனேன்" - ராஜபக்சே

சிங்கள மக்களின் வாக்குகளாலே தான் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறிய ராஜபக்சே, இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகள் தலையிட இனி அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்களின் வாக்குகளால் தான் அதிபர் ஆனேன் - ராஜபக்சே
x
இலங்கை அதிபராக கோட்டாப்பய ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு  கொரோனா முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி, உயிர்களை பாதுகாத்த‌து உள்ளிட்ட அவரது சாதனைகள் அடங்கிய வீடியோ ஒன்று வெளியிட்டப்பட்டது. இதை தொடர்ந்து பேசிய ராஜபக்சே, பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளாலே தான் வெற்றி பெற்றதாக கூறினார். அதே போல, தேசிய வளங்களை விற்பது,  இலங்கை உள் விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகளை அனுமதிப்பது போன்ற யுகம் முடிந்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். எல்லா நாடுகளுடனும் நட்புறவை பேணுவதற்கு தயாராக உள்ள அதே சமயத்தில்,  எந்தவொரு நாட்டுக்கும் அடிபணியாததால், வல்லரசு நாடுகளிடம் இருந்தும் கூட மரியாதை கிடைப்பதாக கூறிய அவர், கூட்டு முயற்சியால் விடுதலை புலிகளை தோற்கடித்த‌தாகவும் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்