சீனாவின் தலைமையில் வர்த்தக கூட்டமைப்ப - ஆா்சிஇபி ஒப்பந்தத்தில் 15 நாடுகள் கையெழுத்து

ஆா்சிஇபி எனப்படும் ஒருங்கிணைந்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் சீனா உள்பட 15 ஆசிய-பிசிபிக் நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன. இதில் இந்தியா கையெழுத்திடவில்லை.
சீனாவின் தலைமையில் வர்த்தக கூட்டமைப்ப - ஆா்சிஇபி ஒப்பந்தத்தில் 15 நாடுகள் கையெழுத்து
x
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆசியான் நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் ஆா்சிஇபி ஒப்பந்தம் கையெழுத்தானது. தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பில் இடம்பெற்றிருக்கும் சிங்கப்பூா், மலேசியா, தாய்லாந்து, மியான்மா், கம்போடியா, வியட்நாம்,  இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், புருணே, லாவோஸ் ஆகிய 10 நாடுகளும், சீனா, ஜப்பான், தென்கொரியா, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 5 நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன. ஆசிய-தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கிடையே தடையற்ற வா்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கூட்டமைப்புக்கு சீனா தலைமை தாங்குகிறது. உலகின் மிகப் பெரிய வர்த்தக கூட்டமைப்பாக பார்க்கப்படும் இந்த கூட்டமைப்பு உலக பொருளாதாரத்தில் சுமார் 30 சதவீத பங்கு கொண்டதாக இருக்கும். இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. கடந்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், சில பொருட்களுக்கு வரியை ரத்து செய்வது உள்ளூரில் வெளிநாட்டு பொருட்கள் குவிந்து, உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதிக்கும் எனக் வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்