பயங்கரவாத குழுக்களுக்கு உதவுவதாக புகார் - பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு

பயங்கரவாத குழுக்களுக்கு இந்தியா உதவுவதாக பாகிஸ்தான் தெரிவித்த குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.
பயங்கரவாத குழுக்களுக்கு உதவுவதாக புகார் - பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு
x
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சர்  ஷா முகமது குரேஷி , ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய உளவு அமைப்புகள் செயல்பட்டு வருவதாகவும்,  அவை பாகிஸ்தானிய எல்லை பகுதிகளில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். 

பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளுக்கு இந்தியா உதவுவதாகவும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும், அவை ஐ.நா. சபைக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.  அணு ஆயுதங்கள் சூழ்ந்த தெற்காசியாவில் சர்வதேச தலையீடு இன்றி அமைதிக்கான உத்தரவாதம் ஏற்படுவது கடினம் என்றும் அவர் கூறினார். 

ஆனால் பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை  இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய  இந்திய வெளியுறவு துறை  செய்தி தொடர்பாளர்  அனுராக் ஸ்ரீவஸ்தவா பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் புனையப்பட்ட கற்பனைகள் என்றும் பாகிஸ்தானின் தந்திரங்களை சர்வதேச சமூகம் நன்கு அறியும் என்றும் தெரிவித்தார்.  இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு  பாகிஸ்தானே உதவுவதாகவும் அவர் கூறினார் . 


Next Story

மேலும் செய்திகள்