இலங்கையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் - சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்

இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தீபாவளியன்று பொது இடங்கள் மற்றும் கோவில்களுக்கு வந்து கூட்டமாக சாமி தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என இந்து குருமார்கள் வலியுறுத்தி இருந்தனர்.
இலங்கையில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் - சமூக இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம்
x
இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தீபாவளியன்று பொது இடங்கள் மற்றும் கோவில்களுக்கு வந்து கூட்டமாக சாமி தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என இந்து குருமார்கள் வலியுறுத்தி இருந்தனர். மேலும் தங்களது வீடுகளில் இருந்தே குலதெய்வ வழிபாடுகள் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தீபாவளியையொட்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  அப்போது மிகக் குறைந்த எண்ணிக்கையில் வந்திருந்த பக்தர்கள் கோயிலுக்குள் செல்லாமல் நுழைவு வாயிலிலேயே, சமூக இடைவெளி விட்டு  நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்