அதிபர் தேர்தலில் தோல்வியை தழுவிய டிரம்ப் : 2-வது பணியை தொடர்வார் என குறிப்பிடும் அதிகாரிகள்
பதிவு : நவம்பர் 14, 2020, 04:48 PM
அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் ஆட்சி தொடரும் என்றே பணியாற்றுவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் ஆட்சி அமைக்க தேவையான 270 வாக்குகளை காட்டிலும் அதிகமாக 306 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால், 232 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவிய டிரம்ப் அதனை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்துக் கொண்டு வழக்குகளை  தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் டிரம்ப் ஆட்சியே தொடரும் என்றே பணியாற்றி வருகிறோம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோவ் பேசுகையில், டிரம்பின் இரண்டாம் ஆட்சி தொடரும் என்ற யூகத்திலே நாங்கள் பணியாற்றி வருகிறோம் எனக் கூறியுள்ளார். இதற்கிடையே ஜோ பைடனின் பதவி ஏற்பு விழாவில் டிரம்ப் கலந்துக் கொள்வாரா என்ற கேள்விக்கு வெள்ளை மாளிகையின் பத்திரிக்கை செயலாளர் மெக் எனானி பதில் அளிக்கையில், டிரம்ப் தன்னுடைய பதவியேற்பு விழாவில் கலந்துக் கொள்வார் எனக் கூறியிருக்கிறார். ஜனவரி மாத பதவி ஏற்புக்கு இன்னும் பல படிநிலைகள் உள்ளது என்றும் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி ஏற்பேன் என்று நம்புகிறார் என்றும் அவர் கூறியிருக்கிறார்

பிற செய்திகள்

சீனா சென்ற உலக சுகாதார நிறுவனம் ஆய்வுகளை நடத்த திட்டம்

கொரோனா தொற்று முதன் முதலில் உருவான சீனாவின் ஊஹான் நகருக்கு, உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு சென்றடைந்தது.

8 views

கொரோனா யாரை முதலில் பாதித்தது? :கண்டுபிடிக்க முடியாமல் போகலாம்- உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் யாரை முதலில் பாதித்தது என்பதை உலகம் கண்டுபிடிக்க முடியாமல் போகலாம் என உலக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

8 views

சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் - சாப்பிட்டவர்களை அடையாளம் காண தீவிரம்

சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

218 views

"மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் பொங்கட்டும்" - பிரிட்டன் பிரதமர் பொங்கல் வாழ்த்து -

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தைப் பொங்கல் திருநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

13 views

சிறிய ரக விமானம் கீழே விழுந்து விபத்து - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வானில் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம், திடீரென்று கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானது.

204 views

இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணுக்கு மீண்டும் அடிக்கல்

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் இலங்கை அரசால் அகற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் அமைப்பதற்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

46 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.