அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: "அடுத்த வாரத்துக்குள் மறு வாக்கு எண்ணிக்கை முடியும்" - ஜார்ஜியா தேர்தல் அதிகாரி தகவல்
பதிவு : நவம்பர் 13, 2020, 11:51 AM
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்படும் என்று ஜார்ஜியா மாகாணம் அறிவித்துள்ள நிலையில், மறு வாக்கு எண்ணிக்கை அடுத்த வாரத்துக்குள் முடிக்கப்பட்டுவிடும் என்று ஜார்ஜியா மாகாண தேர்தல் அதிகாரி கேப்ரியல் ஸ்டெர்லிங் தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் மீண்டும் எண்ணப்படும் என்று ஜார்ஜியா மாகாணம் அறிவித்துள்ள நிலையில், மறு வாக்கு எண்ணிக்கை அடுத்த வாரத்துக்குள் முடிக்கப்பட்டுவிடும் என்று ஜார்ஜியா மாகாண தேர்தல் அதிகாரி கேப்ரியல் ஸ்டெர்லிங் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அட்லாண்டாவில் பேசிய அவர், ஜோ பைடன் மற்றும் டிரம்ப் இடையே 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் இருப்பதாகவும், டிரம்பின் வலியுறுத்தலால் மீண்டும் வாக்குகள் எண்ணப்படவில்லை என்றும் கூறினார்.

சவுதி அரேபிய கல்லறைத் தோட்ட குண்டுவெடிப்பு - ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

சவுதி அரேபிய கல்லறைத் தோட்ட குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. முதலாம் உலகப் போரில் உயிரிழந்தவர்களுக்கு, ஜெத்தா நகரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், நினைவு தினம் அனுசரிக்கப்பட்டபோது, பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பலர் காயமடைந்த நிலையில், இந்த தாக்குதலுக்கு தற்போது ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்று உள்ளனர். சமூக வலைத்தளத்தில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐஎஸ் பயங்கரவாதிகள், குண்டு வெடிப்பை தாங்கள்தான் நிகழ்த்தியதாக கூறி உள்ளனர்.

ராணுவ வீரர்களுக்காக ரத்த தான முகாம் - ரத்தம் அளிக்க மக்கள் ஆர்வம்

ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில், காயம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு ரத்தம் அளிப்பதற்காக அந்நாட்டு அரசு ரத்த தான முகாமை தொடங்கி உள்ளது. எத்தியோப்பிய அரசுக்கும், அந்நாட்டின் திஹாரி விடுதலை முன்னணிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ள நிலையில், ஏராளமான ராணுவ வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர். அவர்களுக்கு ரத்தம் அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ரத்த தான முகாம்களில்,  மக்கள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்து செல்கின்றனர்.

வெள்ளத்தில் தத்தளிக்கும் பிலிப்பைன்ஸ் - வேம்கோ புயலால் கனமழை, வெள்ளம்

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸை, வேம்கோ புயல் தாக்கிய நிலையில், அங்கு பெய்த கன மழையால், தலைநகர் மணிலாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால், மணிலாவின் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தால், ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில், மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். புயல் மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி இதுவரை 7 பேர், பிலிப்பைன்ஸில் உயிரிழந்து உள்ளனர். 

'சோஃபியா ஓபன்' டென்னிஸ் தொடர் -டென்னிஸ் மட்டையை சேதப்படுத்திய வீரர்

பல்கேரியாவில் சோஃபியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்துவரும் நிலையில், உலகின் 12-ஆம் நிலை வீரர் டெனிஸ் ஷபோவலோவ், போட்டியில் தோல்வி அடைந்ததால், தன்னுடைய டென்னிஸ் மட்டையை சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரவுண்ட் ஆஃப் 16 ஆட்டத்தில், மல்டோவிய வீரர் ரடு அல்பட்டிடம், ஷபோவலோவ் 2-க்கு 6, 4-க்கு 6 என்று நேர் செட்களில் தோல்வி அடைந்தார். அப்போது, தோல்வி அடைந்த ஆத்திரத்தில், அவர் தன்னுடைய டென்னிஸ் மட்டையை வேகமாக மைதானத்தின் தரையில் அடித்தார்.

தொடர்புடைய செய்திகள்

இறுதி கட்டத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு பணி - கொரோனா தடுப்பு மருந்து வினியோகம் செய்ய புதிய திட்டம்

கொரோனா தடுப்பு மருந்து வினியோகம் செய்வதற்காக புதிய செயலியை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

28 views

பிற செய்திகள்

வெப்பத்தை தணிக்க முயற்சி - உற்சாக குளியல் போடும் கோலா கரடி

ஆஸ்திரேலியாவில் கோலா கரடி உற்சாக குளியல் போடும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது.

7 views

நீண்ட இடைவெளிக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி - விமான நிலையங்களில் படையெடுக்கும் மக்கள்

ஆஸ்திரேலியாவில் ஊரடங்கு தளர்வுக்கு பின் முதல் முறையாக பொதுமக்கள் தங்கள் உறவினர்களை கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

7 views

குருநானக் பிறந்த நாள் விழா... - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து

குருநானக் பிறந்த நாள் விழா... - ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வாழ்த்து

8 views

ரஷ்யாவில் கொட்டித் தீர்க்கும் பனி - உறைபனியில் விளையாடும் குழந்தை

ரஷ்யாவின் நோரில்ஸ்க் பகுதியில் கடும் பனிபொழிவு கொட்டி வருகிறது.

22 views

அமெரிக்காவில் ஆன்லைன் வர்த்தகம் படுஜோர் - ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம்

அமெரிக்காவில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டி விற்பனை நிறுவனங்கள் சாதனை படைத்து உள்ளது.

10 views

புதிய தீம் பார்க் விளையாட்டு - வரும் 4-ந்தேதி அனுமதி

ஜப்பானில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தீம் பார்க்கை வரும் 4ந்தேதி பொதுமக்கள் கண்டுகளிக்க அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.