"ஸ்புட்னிக் V தடுப்பு மருந்து 92% வெற்றி" - ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொரோனாவுக்கான ஸ்புட்னிக் V தடுப்பு மருந்து 92 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஸ்புட்னிக் V தடுப்பு மருந்து 92% வெற்றி - ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
ரஷ்யாவில், இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 20 ஆயிரத்து 977 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 18 லட்சத்து 17 ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்து 161 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கான ஸ்புட்னிக் V தடுப்பு மருந்து 92 சதவிகிதம் வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இடைக்கால பரிசோதனைகளின் அடிப்படையில் ஸ்புட்னிக் பயனுள்ளதாக உள்ளது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்