"கொரோனா தடுப்பு மருந்து 3-ம் கட்ட சோதனை வெற்றி" - ஃபைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனங்கள் அறிவிப்பு

கொரோனா தடுப்பு மருந்து சோதனை 90 சதவீதம் வெற்றியடைந்துள்ளதாக, மருந்து தயாரிப்பு நிறுவனங்களான பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
கொரோனா தடுப்பு மருந்து 3-ம் கட்ட சோதனை வெற்றி - ஃபைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனங்கள் அறிவிப்பு
x
கொரோனா தடுப்பு மருந்து சோதனையில், அமெரிக்க நிறுவனமான பைசரும், ஜெர்மன் நிறுவனமான பயோஎன்டெக்கும், இணைத்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் 3-ம் கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளதாக, ஃபைசர் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் பர்லா தெரிவித்துள்ளார். முதல் டோஸ் கொடுத்து 28 நாட்களிலும், இரண்டாவது முறையாக, 2 டோஸ் கொடுத்ததில் 7 நாட்களில் பாதிப்பு குறைந்து, எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக  தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு இதுவரை 43 ஆயிரத்து 500-க்கும் 
மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு சோதிக்கப்பட்டதாவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்