உலகின் முதல் 6ஜி தொழில்நுட்ப செயற்கைக்கோள் - சீனா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது

உலகில் முதல் 6 ஜி தொழில்நுட்ப செயற்கைக்கோளை சீனா விண்ணுக்கு வெற்றிகரமாக அனுப்பி உள்ளது.
உலகின் முதல் 6ஜி தொழில்நுட்ப செயற்கைக்கோள் - சீனா வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது
x
6ஜி எனப்படும் ஆறாம் தலைமுறைக்கான தொலைபேசியை அடிப்படையாக கொண்ட இணையதள நெட்வோர்க் பரிசோதனையில் சீனா தீவிரமாக இறங்கியுள்ளது. இதுதொடர்பாக 13 செயற்கைக்கோள்களை ஒரே ராக்கெட்டில் விண்ணுக்கு சீனா அனுப்பி இருக்கிறது என உள்ளூர் மீடியா செய்தி வெளியிட்டுள்ளது. சீனா இப்போது பரிசோதிக்கும் 6 ஜி தொலைதொடர்பு 5 ஜி தொலை தொடர்பைவிடவும் 100 மடங்கு வேகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் 4ஜி என அழைக்கப்படும் நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பத்தை விடவும் பன்மடங்கு வேகமாக பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை கொண்டிருக்கும் என்று பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் 5ஜி தொழில்நுட்பத்தை முறையாக அறிமுகம் செய்ய வழி காணப்படாத நிலையில், சீனா அடுத்தக்கட்டத்திற்கு பயணம் செய்ய தொடங்கியிருக்கிறது. இருப்பினும், 6ஜி தொழில்நுட்ப வேக கட்டமைப்பு மனித உடல்நலத்தை பாதிக்கலாம் என்ற விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்