எல்லையோரத்தில் ரயில்பாதை அமைக்கும் சீனா - பணிகளை துரிதப்படுத்த சீன அதிபர் உத்தரவு

இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையோரத்தில் ரயில்பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டு உள்ளார்.
எல்லையோரத்தில் ரயில்பாதை அமைக்கும் சீனா - பணிகளை துரிதப்படுத்த சீன அதிபர் உத்தரவு
x
இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநில எல்லையோரத்தில் ரயில்பாதை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டு உள்ளார். இந்த ரயில்பாதை அறிவியல் பூர்வமாகவும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலும் அமைய வேண்டும் என்று அவர் கூறி உள்ளார். சீனாவின், சிசுயான் மாகாணத்தில் இருந்து, திபெத்தின் லின்ஷி பகுதியை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ள இந்த ரயில்பாதை, அந்த பிராந்தியத்தில் பாதுகாப்பை பலப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.

சுஷா நகரை கைப்பற்றிவிட்டோம் - அதிபரின் அறிவிப்பால் மக்கள் உற்சாக கொண்டாட்டம்

நாகர்கோனா - காராபாக் பிராந்தியத்தின் முக்கிய நகரமான சுஷா நகரை கைப்பற்றி விட்டதாக அஜர்பைஜான் அதிபர் இகாம் அலியேவ் தெரிவித்துள்ளார். எல்லை பிரச்சினை காரணமாக அஜர்பைஜான் அர்மேனியா ராணுவ வீரர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அஜர்பைஜான் அதிபரின் திடீர் அறிவிப்பால் வீதிகளில் இறங்கி பொது மக்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட தொடங்கினர். அதேநேரம் அர்மேனிய அதிபர் அர்மென் சர்கிஸ்சான் இதை திட்டவட்டமாக மறுத்து உள்ளார்.  

இந்தியாவில் வசித்த ஜோ பைடன் முன்னோர்கள் - செனட் உறுப்பினரான போது பைடனுக்கு மும்பையில் இருந்து கடிதம்


கமலா ஹாரீஸ் மட்டுமல்ல... அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிப்பெற்று அதிபராக உள்ள ஜோ பைடனுக்கும் இந்தியாவுடன் தொடர்பு உள்ளது.

2013-ம் ஆண்டு அமெரிக்காவின் துணை அதிபராக இருந்த போது ஜோ பைடன், மும்பைக்கு வந்திருந்தார். அப்போது, மும்பையிலிருந்து பைடன் என அவர் குறிப்பிட்டு பேசியது மிகவும் ஆச்சர்யமளித்தது. அதற்கான விளக்கம் கொடுத்த பைடன், தன்னுடைய முன்னோர்கள் மும்பையில் வசித்தார்கள் எனக் கூறினார். மேலும், 1972-ம் ஆண்டு தான் முதல் முறையாக அமெரிக்காவின் செனட் செபை உறுப்பினராக பதவியேற்ற போது, மும்பையிலிருந்து வாழ்த்துக்கள் கடிதங்கள் தனக்கு வந்தது  என தெரிவித்தார். மேலும், அதில் ஒரு கடிதம் பைடன் என்ற பெயருடன் வந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றும் அவர்கள் யார் என்று பின்தொடர முடியாதது வேதனைக்குரிய விஷயம் என்றும் குறிப்பிட்டார். 2015-ம் ஆண்டு வாஷிங்டன்னில் பேசிய போதும், தன்னுடைய முன்னோரான ஜார்ஜ் பைடன் கிழக்கு இந்தியா கம்பேனியில் கேப்டனாக பணியாற்றினார் என்றும் ஓய்வு பெற்ற பின்னர் இந்திய பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு இந்தியாவிலே வசித்தார் என்றும் கூறியிருந்தார். ஜோ பைடன் மும்பையில் 3, 5 பைடன்கள் உள்ளனர் எனக் குறிப்பிட்டு இருந்தாலும் இதுவரையில் வெளிப்படையாக நாங்கள் பைடனின் உறவினர்கள் என யாரும் தெரிவிக்கவில்லை...  1700-களில் கிழக்கு இந்திய கம்பேனிக்கு வர்த்தக ரீதியாக பணிக்கு வந்த பைடன் முன்னோர்கள் இந்தியாவில் மும்பை மற்றும் சென்னையில் வாழ்ந்து உள்ளனர்.  

"தேர்தல் தோல்வியை ஏற்க மாட்டேன்" -  டிரம்ப்


தேர்தலில் கண்ட தோல்வியை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என  டிரம்ப் தெரிவித்து உள்ளார். தேர்தல் முடிவுகளை அடுத்து கோல்ப் விளையாட்டில் முனைப்பு காட்டி வந்த டிரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார். தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக முடியவில்லை என்றும் எந்த மாகாணத்திலும் அதிபராக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார். மேலும் தேர்தல் முடிவுகளை சட்டப்பூர்வமாக கையாண்டு விரைவில் தான் பெரிய வெற்றி பெறுவேன் என்றும் தெரிவித்தார்.   



Next Story

மேலும் செய்திகள்