அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜோ பைடன் வெற்றி - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜோ பைடன் வெற்றி - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து
x
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார். டுவிட்டரில் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், இந்திய-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு பைடனுடன் இணைந்து செயலாற்றுவதை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். 

பிரதமர் மோடி, ஜோ பைடனுக்கு வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றிருக்கும் ஜோ பைடனுக்கு வாழ்த்துகள் என்று கூறி உள்ளார். துணை அதிபராக இருந்தபோது, இந்திய-அமெரிக்க உறவை ஜோ பைடன் வலுப்படுத்தியதாகவும் மோடி குறிப்பிட்டு உள்ளார். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிசுக்கும் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். கமலா ஹாரிசுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும், உங்களின் வெற்றி, உங்கள் சித்திகளுக்கு மட்டும் உரித்தானது இல்லை என்றும், அது ஒட்டுமொத்த இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்களுக்குமானது என்றும் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.

பைடன், கமலா ஹாரிஸுக்கு ராகுல் வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர், அமெரிக்காவை ஜோ பைடன் ஒருங்கிணைப்பார் என்று கூறி உள்ளார். அமெரிக்க துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸுக்கும் ராகுல் காந்தி வாழ்த்து கூறியுள்ளார். கமலா ஹாரிஸ் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டிருப்பது இந்தியர்களை பெருமைப்படுத்துவதாக ராகுல் காந்தி டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.

ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு ஸ்டாலின் வாழ்த்து

அமெரிக்க அதிபராகவுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராகவுள்ள கமலா ஹாரிஸுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து டுவிட்டரில் அவர், அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றிருப்பதற்கு வாழ்த்துகள் என்று பதிவிட்டு உள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸை துணை அதிபராக, அமெரிக்க மக்கள் தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஸ்டாலின் கூறி உள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்